மெயின் ஆளே இல்லாமல் நடக்கும் கூலி பட ஷூட்டிங்!! பிளான் போட்ட இயக்குனர்!!

Photo of author

By Jeevitha

Cinema:இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்பட்டு வரும் படம் “கூலி”. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நன்றாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென்று ரஜினிகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு படத்தின் ஷூட்டிங்-க்கு வர முடியாமல் போனது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஒரு சிறிய ஆபரேஷன் செய்வதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரெஸ்டில் இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இல்லாமல் கூலி பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிறுத்தவில்லை. இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் எம்ஜிஎம் ஷாப்பிங் மால் போன்ற முக்கிய இடங்களில் நடைபெறுகிறது. ஆனால் அந்த ஷூட்டிங்கில் ரஜினி இருக்க வேண்டிய காட்சிகள் கூட எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் தற்போது ரஜினி உடல் நலம் முக்கியம் என கருதி அவர் இருக்க வேண்டிய காட்சிகளையும் எடுத்து பின்னர், ரஜினியை  தனியாக வைத்து சூட்டிங் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். பிறகு அதை சிஜி மூலம் திரைப்பட காட்சிகள் இணைத்து அதற்கான வேலைகள் பார்க்கலாம் என வலைப்பேச்சு சேனல் தெரிவித்து இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் மே-8 கூலி படம் வெளியிட போவதாக இருந்த நிலையில், அதற்கான ரிலீஸ் தேதி மாற்றப்படும் என படக்குழு பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.