அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! 

Photo of author

By Sakthi

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்!
நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் வழங்குவது தொடர்பான மசோதாவை பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியா முழுவதும் இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் இன்டர்நெட் சேவையை அளவில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காகவே இரயில் நிலையங்களில் இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மக்கள் கூடும் பொது இடங்களில் கூட இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் சில மாநில அரசுகள் தேர்தலின் பொழுது அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் இருக்கும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் வழங்குவது தொடர்பான மசோதாவை மாநிலங்களவை பரிசீலனை செய்வதற்கு மத்திய அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு சிபிஏம் கட்சியின் எம்.பி சிவதாசன் அவர்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்குவது தொடர்பான மசோதாவை அறிமுகம் செய்தார். இதையடுத்து ஒரு வருடமாக இந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது.
தற்பொழுது எம்.பி சிவதாசன் அவர்கள் அறிமுகம் செய்த மசோதாவை பரிசீலனை செய்ய குடியரசுத் தலைவர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து மத்திய அரசு தற்பொழுது இந்த மசோதாவை பரிசீலனை செய்ய மாநிலங்களவை செயலாளரிடம் அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.