ஐபிஎஸ் போட்டி தேர்வை தமிழில் எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி:!

0
78

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு வழிகாட்டும் நோக்கில்
மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் இலவச இணைய வழி கருத்தரங்கம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்16), காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடத்தப்படவுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது.

இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு,மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை தேர்வுக்காக படிக்கும் முறை இது போன்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளனர்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் “அஅபஇஏஐ பஅஙஐக ஐஅந எஐமஈஉ 2021 என டைப் செய்து” 91763 94653 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு,
89394 65466, 91760 84468 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவுக்கான தனது சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra