பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

0
46

 

பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி…

 

நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் சித்திக் அவர்கள் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காவலன், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா, நடிகர் பிரசன்னா நடித்த சாது மிரண்டால், நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 

இவர் கடைசியாக கடந்த 2020ம் ஆண்டில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான பிக்பிரதர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சித்திக் அவர்கள் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 

69 வயதாகும் இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இயக்குநர் சித்திக் அவர்கள் ஏற்கனவே நிமோனியா மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

இந்நிலையில் இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் இயக்குநர் சித்திக் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களும், திரைப் பிரபலங்களும், நண்பர்களும் இயக்குநர் சித்திக் நலம் பெற் வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகிறார்கள்.