நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திருமலை பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் வீட்டு மனைப் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடந்ததன் காரணமாக அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், மூர்த்தி உட்பட காவல்துறையினர் அந்த கொலையை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பான தகவலை அறிந்த தாராபுரம் காவல் கண்காணிப்பாளரும் நேரில் வந்து விசாரணை செய்தார். சடலத்தின் அருகே இரத்தம் படிந்த பெரிய கத்தி ஒன்றும் கிடந்துள்ளது.

அதன் காரணமாக இறந்தவரின் முகம் கத்தியால் வெட்டப்பட்டது தெரிந்தது. இறந்தவருக்கு வயது 30 ஆக இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் எதற்காக வாலிபரை கொலை செய்தார்கள். யார் கொலை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த வாலிபர் மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த புரத்தில் உள்ள விக்னேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் இவரின் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்தது. இவர் தனது நண்பர்களுடன் தாராபுரம் வந்த சமயத்தில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்னேஷை கொலை செய்தவர்கள் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதை தொடர்ந்து விக்னேஷின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கொலையாளிகளை கைது செய்ய காவல்துறையினர் விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தி உள்ளனர். நண்பரை வெளியூர் அழைத்து சென்று நண்பர்களை கொலை செய்த விஷயத்தில், விக்னேஷின் கூட்டாளிகளை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Comment