இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலைவி வருகிறது.
இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதோடு நாளை தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஒரு பத்தாம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி , சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று வரும் 11ஆம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ,அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்க்கான வாய்ப்புள்ளது.