பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

0
208
#image_title
பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!
பம்பையிலிருந்து சபரிமலை வரை பொருட்கள் கொண்டு செல்ல புதிதாக கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர பூஜையன்று லட்சக் கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய சபரிமலையின் அடிவாரமான பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பொருள்களை டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லும்போது சுற்றுச்சூழல் மாசடைகிறது. மேலும் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க பம்பையில் இருந்து சபரிமலை வரை பொருள்களை கொண்டு செல்ல கேபிள் கார் வசதி கொண்டுவர சபரிமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கேபிள் கார் வசதியை அமைக்க கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கேபிள் கார் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தந்தவுடன் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது. கேபிள் கார் அமைக்க மண் ஆய்வு பணிகளும் தொடங்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Previous articleதிரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!
Next articleஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!