!இனி தமிழகம் முழுவதும் ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு

Photo of author

By Sakthi

தன்னாட்சி பெற்று இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்யவும் அந்த பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய திட்டத்தை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பல புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு என்று தனியாக மதிப்பும் படிக்க வேண்டும் என்ற ஆசையும் மாணவர்களுக்கு மத்தியில் காலம் செல்ல செல்ல அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றது. பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்க அதிக மாணவர்கள் விருப்பம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் தற்பொழுது மொத்தமாக 433 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த லிஸ்டில் 150 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த 150 தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளும் தங்களது கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தாங்களாகவே தேர்வுகள் நடத்தி மதிப்பெண்களையும் வழங்குகின்றது. இதில் பல கல்லூரிகள் 90 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை வெளிக்காட்டியுள்ள நிலையில் தவறான வழியில் முறைகேடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இதையடுத்து இந்த புகார்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிய வந்ததை அடுத்து புதிய திட்டம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தன்னாட்சி பெற்று இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தையும் கல்லூரிகளின் நிலையை அறிந்து கொள்ளவும் ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு என்ற நடைமுறையை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலமாக அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்று இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு தேர்வை நடத்தும். இந்த ஒரு தேர்வுக்கான பாடம் என்பது ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாறும் என்றும் அந்த பாடம் என்ன என்பதை அண்ணா பல்கலைக்கழகம் தான் முடிவு செய்யும் என்றும் அறிவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் இந்த திட்டத்திலிருந்து ஒரு சில கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது என்.ஐ.ஆர்.எப்(NIRF) தரவரிசை பட்டியலில் டாப் 200 இடங்களுக்குள் இருக்கும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு திட்டம் குறித்து பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் அவர்கள் “தமிழகத்தில் தன்னாட்சி பெற்று இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை ஒவ்வொரு செமஸ்டரிலும் சோதனை செய்யப்படவுள்ளது. இதற்காக ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு என்ற திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு திட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்வில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுக்கக்கூடாது. எடுத்தால் அந்த செமஸ்டர் தேர்வில் மற்றப் பாடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் மதிப்பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்று கூறினார்.