DMDK DMK: கடந்த சில நாட்களாகவே நாட்டையே உலுக்கியுள்ள துயர சம்பவம் கரூர் உயிரிழப்புகள் தான். சம்பவம் நடந்த அன்று இரவு தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் சென்றது அனைவரையும் அதிருப்த்திக்குள்ளாக்கியது. மூன்று நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட விஜய், அந்த பதிவில் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கிருஷ்ணகிரியில் பரப்புரை நடத்திய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் சம்பவத்திற்கு விஜய்யும், முதல்வர் ஸ்டாலினும் தான் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் கரூர் துயரத்திற்கு கரூர் முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் காரணம் என்று நன்றாக தெரியும் என்றும் கூறியிருக்கிறார். சுமார் 100 அடி கொண்ட பகுதியை ஒதுக்க யார் அனுமதி அளித்தது. அந்த கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் வருவதற்கு யார் அனுமதி அளித்தது.
விஜய்யின் தொண்டர்களோ, ரசிகர்களோ அவர் மீது செருப்பு வீசுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி இருக்க அவர் மீது வீசப்பட்ட செருப்பு செந்தில் பாலாஜியின் சதி என்றும் கூறினார். விஜய் ஏற்கனவே 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கெல்லாம் நிகழாத அசம்பாவிதம் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் கரூரில் மட்டும் நிகழ்ந்திருப்பது இதில் அவரின் சதி வேலை இருப்பதை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். பிரேமலதா விஜயகாந்த் விஜய்யிக்கு சாதகமாக பேசியது கேள்வி குறியாகியுள்ளது.