தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, அதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு முன்பே அறிவித்திருந்தது.

அந்த விதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பள்ளி,கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு விதித்திருந்தது .

இந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு மற்றும் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, நாளை சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு பொங்கல் விடுமுறைக்கு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மறுபடியும் தலைநகர் சென்னைக்கு திரும்பி இருப்பதால் சென்னையில் இன்று நோய் தொற்று பாதிப்பு 10 ,000த்தை கடப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து சனிக்கிழமையும், முழுமையான ஊரடங்கு அனுசரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.