விமான விபத்து! முப்படைகளின் தலைமைத் தளபதியின் மரணம் விபத்தா அல்லது சீனாவின் சதி வேலையா?

0
110

நேற்று குன்னூரில் நடைபெற்ற விமான விபத்தில் பலியான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் உடல் நாளைய தினம் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார், இந்த முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவியை முதலில் அலங்கரித்தவர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. இவர் 1978ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து இருக்கிறார், அன்று முதல் தன்னுடைய இறப்பு நாள் வரையில் ராணுவத்திற்காக மிக தீவிரமாக பணிபுரிந்துள்ளார்.

அதோடு இவருடைய குடும்பத்தில் இவருடைய தந்தை உள்ளிட்ட பலர் ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதோடு பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் மிக உயரிய பல விருதுகளையும் வென்றிருக்கிறார், மேலும் ராணுவத்தில் நடத்தப்பட்ட பல ஆபரேஷன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இந்தியாவிற்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாகி வந்தது இந்த நிலையில், மிக திறமையாக செயல்பட்டு வந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் விமான விபத்தில் பலியாகி இருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உளுக்கி இருக்கிறது.

இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.இந்த விமான விபத்து தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது இதுதொடர்பான விவரங்களை விசாரித்தபோது அங்கே பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் பாதை சரியாக தென்படாதது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் மிக முக்கிய நபர்கள் பயணம் செய்யும் mi-17 ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாகும் என்று சொல்லப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் நெருங்காதவாறு இந்த விமானங்களின் கட்டமைப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.அதேநேரம் பனிமூட்டம் காரணமாக, இந்த விமான விபத்து நடைபெற்று இருக்கிறது என்றால் காஷ்மீர் பகுதியில் பெய்யாத பனிபொழிவா தமிழகத்தில் இருந்து விடப் போகிறது என்பதும் பலரின் கேள்வியாக இருக்கிறது.

அத்துடன் நாட்டின் ராணுவத்தில் இருக்கும் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு பதவி என்றால் அது முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியே இப்படி நாட்டின் ராணுவத்தில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒரு நபர் திடீரென்று விபத்தில் மரணிக்கிறார் என்றால் அதனை வெறும் விபத்தாக மட்டுமே நாம் கடந்து சென்று விட இயலாது என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

அத்துடன் தற்சமயம் இந்தியாவிற்கு அண்டை நாடுகளால் தேசிய அளவில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது, அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சீனா, பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தற்சமயம் இந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் ஆனாலும் அந்த கோபத்தை அவர்கள் இதுவரையில் வெளிப்படையாக காட்டியதில்லை அதேநேரம் இந்திய ராணுவக் கட்டமைப்பு அவர்களை சற்றே யோசிக்க வைத்திருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

இன்னொரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது இந்த விமான விபத்தில் மரணம் அடைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கடந்த 1987ஆம் ஆண்டு இந்தியா, சீனா இடையிலான போரின் போது மிகத் திறமையாக செயல்பட்டு சீன நாட்டை துவம்சம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது, இது தொடர்பாகவும் நாம் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்

அதோடு தற்சமயம் சீனா இந்தியா மீது எப்படி போர் தொடுக்கலாம் என்று மறைமுகமாக யோசித்துக் கொண்டு இருக்கிறது என்றால் அது மிகை ஆகாது, ஏனெனில் ஆசிய கண்டத்தில் வலிமை மிக்க நாடாக திகழ்ந்து வருவது இந்தியா. அதேநேரம் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு தான் வந்துவிடவேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேசமயம் இந்தியாவை அதன் போக்கிலேயே விட்டு விட்டால் காலப்போக்கில் இந்தியா சீனாவிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விடும் என்பதும் அந்த நாட்டின் யோசனையாக இருக்கலாம்.

ஒருவேளை இந்தியா மீது சீனா போர் தொடுக்க முற்பட்டால் அந்த சமயத்தில் பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்து விட்டால் அது சீனாவின் திட்டத்தை நிச்சயமாக தவிடுபொடியாக்கி விடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. என்றால் ஏற்கனவே சீனாவுடன் போர் புரிந்த மிக நீண்ட அனுபவம் வாய்ந்தவர்தான் இந்த பிபின் ராவத் என்பது பலரும் அறிந்ததுதான். அப்படி அனுபவம் வாய்ந்த ஒருவர் இந்திய ராணுவத்தில் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பது சீனாவின் திட்டத்திற்கு நிச்சயமாக முட்டுக்கட்டை போடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில்தான் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெறுவதற்காக நேற்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் உயரதிகாரிகள் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்கள்.

ஹெலிகாப்டர் குன்னூர் மலைப் பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதத்தில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.குரூப் கேப்டன் வருணசிங் மட்டும் படுகாயங்களுடன் ராணுவமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை சார்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்த சூழ்நிலையில், மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் உடலுக்கு நாளையதினம் இறுதிச் சடங்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நடுவில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் உடல்கள் இன்றைய தினம் ராணுவ விமானத்தின் மூலமாக டெல்லி கொண்டு செல்லப்பட இருக்கிறது.இந்தநிலையில், நாளை காலை 11 மணி முதல் 2 மணி வரையில் பிபின் ராவத் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு டெல்லி கண்டோன்மென்டில் இருக்கின்ற மயானத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் உடல்கள் தகனம் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.