காசு கொடுத்தாதான் வருவியா?!. நீயெல்லாம் ஒரு நடிகனா?!.. யோகிபாபுவை திட்டும் தயாரிப்பாளர்!…

0
5
yogibabu
yogibabu

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் அடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு ஹவில்தார். அதனால் யோகிபாபு குழந்தையாக இருக்கும்பொழுதே நிறைய பயணிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக இவர் 1990களில் தொடர்ந்து ஜம்முவில் படித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. லொள்ளு சபாவின் சில நிகழ்ச்சிகளில் கும்பலில் நிற்கும் வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகர் என யாருமில்லை. ஏனெனில், வடிவேலு ஏறக்குறைய ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். சந்தானமும், சூரியும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பார்கள் எனத்தெரிகிறது. எனவேதான், கிடைத்த இடைவெளியை யோகிபாபு பிடித்துக்கொண்டார். அவரின் காமெடி ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைப்பது இல்லை என்றாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது.

இந்நிலையில், கஜானா என்கிற படத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகிபாபு கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 லட்சம் பணம் கேட்டதால் அவர் வரவில்லை என்கிறார்கள். இதையடுத்து கோபத்துடன் பேசிய கஜானா படத்தின் தயாரிப்பாளர் ராஜா ‘காசு கொடுத்தாதான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நீ வருவியா?. நடிகனா இருக்கவே உனக்கு தகுதி இல்லையே’ என கோபத்துடன் பேசியிருக்கிறார்.

Previous articleஆயிரம் கோடி பட்ஜெட்!. தொடர்ந்து 10 படங்கள்!. லைக்கா போடும் பக்கா ஸ்கெட்ச்!..
Next articleஇதை மீறினால் அவ்வளவுதான்.. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!