வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்!

0
135
Gangana Ranawaka indirectly complimented the actor through the internet by praising someone else!
Gangana Ranawaka indirectly complimented the actor through the internet by praising someone else!

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்!

மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள்  பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் காரணமாக 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கூட்டிச் சென்றனர்.

அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்தான். இந்நிலையில் சாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பல பாலிவுட் பிரபலங்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்களது கருத்துக்களைக் கூறி வந்தனர். ஹன்சல் மேத்தா. ஹிருத்திக் ரோஷன், பூஜா பட், மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கங்கனா ரனாவத்தும் ஒருவர். இவர் தற்போது சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு சர்ச்சையான விஷயத்தை பகிர்ந்து  உள்ளார். அதுவும் குறிப்பாக இந்தப் பிரச்சினையை வைத்து ட்விட்டர் மூலம் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் தனது மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது, மிக பகிரங்கமாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

மேலும் மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன் என்றும், இதுதான் எனது தோல்வி. இந்த விஷயத்தில் அவரைப் பாதுகாக்கும் செயலில் நான் ஈடுபடவே மாட்டேன் என்றும் கூறியிருந்தார். # Justsaying என்ற ஹாஷ்டேக் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் இதை  வெளியிட்டு இதன் மூலம் ஷாருக்கானின் பெயரை குறிப்பிடாமல், அவரைத்தான் விமர்சித்து உள்ளார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleசோபியான் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி..!
Next articleகேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கண்டிப்பாக கனமழை பொழியும்! அதுவும் ஆரஞ்சு எச்சரிக்கை!