கஞ்சா வியாபாரம் செய்த இளைஞரின் சொத்துக்கள் முடக்கம்! ஆவடி காவல்துறை ஆணையர் அதிரடி!

Photo of author

By Sakthi

கஞ்சா வியாபாரம் செய்த இளைஞரின் சொத்துக்கள் முடக்கம்! ஆவடி காவல்துறை ஆணையர் அதிரடி!

Sakthi

Updated on:

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரையடுத்திருக்கின்ற அரசூர் கிராமம் பெரியார் தெருவை சார்ந்தவர் பிரபாகரன், இவர் நேற்று முன்தினம் அம்பத்தூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அம்பத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். அவரிடமிருந்து 4️ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிரபாகரன் மீது முன்னரே மதுராந்தகம் காவல்துறையில் 2 கஞ்சா விற்ற வழக்குகளும், மேல்மருவத்தூர் காவல் துறையில் 1 வழிப்பறி வழக்கும் இருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

அதோடு பிரபாகரன் தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து அயப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்களை குறி வைக்கும் விதமாக விற்பனை செய்ததும், தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஆவடி காவல்துறை ஆணையர் சந்திப்ராய் உத்தரவினடிப்படையில், அம்பத்தூர் காவல்துறையினர் கஞ்சா வியாபாரி பிரபாகரனின் மீது பொருளாதார ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதன் பொருட்டு அவருடைய வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலே சொல்லப்பட்ட தகவல் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.