பிரபல நடிகர் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Photo of author

By Sakthi

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் இராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் சென்னையில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இதற்காக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விஷால் தொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

காயத்ரி ரகுராம். அந்த பதிவில் சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் என்னை மிகுந்த பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த பள்ளியை மூட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் இதுவரை பள்ளி நிர்வாகம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

 

இவ்வாறான குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவருடைய இந்த பதிவானது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான காயத்ரி ரகுராம் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது நீங்களும் உங்கள் நண்பர்களும் எத்தனை பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து இருப்பீர்கள். உங்களைப் போன்றவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.