மிதுனம்-இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

0
222

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் மற்றும் வீண் அலைச்சல்கள் இருக்கும் என்பதால் பொறுமையாக செயல்பட வேண்டும். நிதி நிலைமை வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம்.

உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் மௌனம் காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதில் சென்றவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here