மிதுனம் – இன்றைய ராசிபலன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
98
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். வாகன பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது.

 

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை குறையும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

 

வருமானம் வருவதற்கு காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் வந்து சேரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் மற்றும் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்காக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் மறையும் நாள்!!
Next articleகடகம் – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!!