மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!

0
182
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்.அயன‌ சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் வந்து சேரும். குடும்ப உறவிற்காக சில செலவுகளை செய்வீர்கள். கணவன் மனைவி இடையே ஓரளவிற்கு அனுகூலமான சூழ்நிலைகள் அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயண வாய்ப்புகளால் சில மாற்றங்கள் வந்து சேரும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு செலவுகள் வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அற்புதமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள்!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு லாபங்கள் மேம்படும் நாள்!