மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொருளாதார நிலை உயரும் நாள்!

0
65
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொருளாதார நிலை உயரும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். எதிர்பார்க்காத தன வரவு ஒன்று வந்து சேர்வதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் உண்டாகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித உற்சாகத்துடன் காணப்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் தைரியமாக முடிவெடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீ தேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

author avatar
Selvarani