மிதுனம் – இன்றைய ராசிபலன்!! முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் நாள்!!

0
126
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு  பகவான் உள்ளதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

 

குடும்ப உறவு சிறப்பாக செயல்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் வேலைகளை திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் சில சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் உங்கள் அதிரடி மேற்பார்வையில் சில திட்டங்களை தீட்டி வெற்றி அடைவீர்கள்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.