மிதுனம் ராசி-இன்றைய ராசிபலன்!! உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மிதுனம் ராசி-இன்றைய ராசிபலன்!! உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும் நாள்!!

Selvarani

Updated on:

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி-இன்றைய ராசிபலன்!! உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். சந்திர பகவான் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் உடன்பிறப்புகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வீர்கள்.

தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் அற்புதமான வெற்றியைப் பெறும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.