மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
173

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். என்றைக்கோ கொடுத்த கடன் ஒன்று இன்றைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள்.

உத்தியோகத்தில் சிறப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் லாபகரமாகவும் செல்லும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர் பார்க்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்கு இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here