மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
159
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஐயன சய்யன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகளை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவதால் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் இருக்கும் நண்பர்கள் பயண வாய்ப்புகள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கை அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்ல பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். மூத்த வயது சேர்ந்த நண்பர்கள் மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு செலவுகள் வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஸ்ரீ நரசிம்ம சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிறுநீரக கற்கள் முதல் சிறுநீர் கடுப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வளிக்கும் ட்ரிங்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!