மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!

0
249

மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள். சந்திராஷ்டமம் விலகுவதால் நன்றாக எல்லா வேலையும் செய்து முடித்து சந்தோஷப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று ஓய்வெடுக்கும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைச் சுமை குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் நிம்மதி பெறுமோச்சொடு சில புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் செல்லும். காதலர்கள் கவனமாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை சுமை குறையும். இல்லத்தரசிகளுக்கு தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடிக்கும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here