மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள். விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோக முன்னேற்றம் கைகொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் லாபகரமாகவும் சுபிட்சகரமாகவும் செல்லும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் ஏற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக செல்வதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டம் விரிவடையும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத நன்மை ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் அருமையாக கிடைக்க பெறுவீர்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் இணைந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.