மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெளிவான மனநிலையுடன் இருக்கும் நாள்!!

0
173

மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெளிவான மனநிலையுடன் இருக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மன குழப்பங்கள் அகன்று தெளிவான மனநிலையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியே இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் எந்த ஒரு காரியங்களிலும் தெளிவாக செய்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். தந்தையின் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான தகவல் ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இல்லத்தில் மனமகிழும் சம்பவம் ஒன்று நடைபெறும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here