மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
78
#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் வந்து சேரும் ஆகையால் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சில பிரச்சனைகள் இருக்கலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் மனக்குழப்பம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அலைச்சலை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டும்

மாணவ மாணவிகள் கல்வியில் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தில் இருப்பது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani