முதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்!

Photo of author

By Sakthi

பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த எல்லா தகவல்களையும் நாட்டின் மக்கள் அனைவரும் செல்போனிலேயே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்பை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் மக்கள் தங்களுடைய தொலைபேசியிலேயே பட்ஜெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 11 மணி அளவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த ஆறு பட்ஜெட் பெண் புடிச்சவன் முதல் தொகுதியானது ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கின்றது இந்த நிலையில் பஞ்சர் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நிறைவு பெறுகிறது நாளை முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை முதல் தொகுதியில் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி வரையில் இரண்டாவது பகுதியாகவும் நடைபெற இருக்கிறது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனவரி மாதம் 29ஆம் தேதி காலை சுமார் 11 மணி அளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார்.

இதுவரையில், எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்வது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அதன் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்யும் அளவிற்கு இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகி இருக்கிறது.

கொரோனா பாதிப்பிற்கு இடையில் இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெற இருப்பதால், இந்த பட்ஜெட் ஆனது முழுவதும் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக டிஜிட்டல் முறையாக தயார் செய்யப்படுகிறது பட்ஜெட். அதோடு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதால் அனைத்து தரப்பு மக்களும் பட்ஜெட் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள இயலும் என்று சொல்லப்படுகிறது.