அதிமுக கூட்டணியில் தேமுதிக.. உறுதி செய்த பொதுக்கூட்டம்.. களைகட்டும் சட்டமன்ற தேர்தல்!!

0
509
General meeting confirmed by DMDK in AIADMK alliance.. Weeding assembly election!!
General meeting confirmed by DMDK in AIADMK alliance.. Weeding assembly election!!

DMMK ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, பாஜகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. தற்போது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து யாரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அன்புமணி அதிக இடங்களை கேட்டு வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் வேறு வழியில்லாமல் இபிஎஸ் இதற்கு ஒப்பு கொண்டார் என்றும் கூறப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக தேமுகவி-டம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால் தேமுதிகவிற்கும், அதிமுகவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமலதா விஜயகாந்த் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றும் சிலர் கூறி வந்தனர்.

ஏற்கனவே தேமுதிக விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்ற செய்தியும் பரவி வந்தது. ஆனால் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த தேமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால் விஜய்க்கு ஆதரவு அளித்த இபிஎஸ்-யை பற்றி எதுவும் பேசவில்லை. எப்போதும் தனது பரப்புரையில் இபிஎஸ்-யை வஞ்சித்து வரும் பிரேமலதா நேற்று அவரை பற்றி பேசாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் அதிமுக, தேமுதிக உடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். இவரின் இந்த மௌனம் கூட்டணியை உறுதி செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Previous articleகரூர் சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.. அத்தனையும் நடிப்பா!!
Next article“குழந்தைகளுக்கு இருமல் சிரப் தேவையில்லை” – முன்னணி நரம்பியல் நிபுணர் அறிவுரை