உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு!
உக்ரைன் நாட்டிற்கு தற்போது ஜெர்மனி ஆதரவு அளித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவம் தொடர்பான உதவியை ஜெர்மனி வழங்கியுள்ளது.
உக்ரைன் நாட்டிற்கு ஜெர்மனி மட்டுமில்லாமல் பல நாடுகள் உதவி செய்து வருகின்றது. இதில் ஜெர்மனி உக்ரைன் நாட்டிற்கு இராணுவ உதவியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான டேங்குகள், இராணுவ எதிர்ப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் உள்பட பல இராணுவ உதிவிகளை ஜெர்மனி உக்ரைனுக்கு செய்யும் என்று அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சுமார் 24,000 கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த உதவி தொடர்பாக ஜெர்மனி அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் “சுமார் 24000 கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைன் நாட்டிற்கு ஜெர்மனி வழங்கும். உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வதில் ஜெர்மனி நேர்மையாக இருக்கும்” என்று அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றது.