CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

Photo of author

By Sakthi

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

Sakthi

Updated on:

Get ready CSK MI fans!! Ticket sale for CSK - MI match begins!!

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு அணிகள் உள்பட மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி மைதானத்திற்கு சென்று போட்டியை கண்டுகளிக்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை சேம்பியன்ஸ் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து முறை சேம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றொரு முறை மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ம் தேதி நடைபெறவுள்ளது.

மே 6ம் தேதி நடைபெறவுள்ள சென்னை மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை நாளை முதல் அதாவது மே 3ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுக்களை ரசிகர்கள் ஆன்லைன் மூலமும் மைதானத்தில் இருக்கும் கவுன்டர்களின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டுகளின் விலை வகுப்புகள் வாரியாக 1500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.