என்ன மன்னிச்சிடுங்க! நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய 17 வயது சிறுமி!
தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கழுமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதால் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கழுமங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிவேல் இவரது மகன் பாலகிருஷ்ணன். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
அந்த சிறுமிக்கும் பாலகிருஷ்ணனக்கும் இடையே காதல் ஏற்பட இருவரும் எல்லை மீறி சந்தோஷமாக இருந்துள்ளனர்.இதற்கிடையே அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பம் ஆகி உள்ளதால் வீட்டில் நடந்தவற்றை அப்படியே பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு மிகவும் வருத்தமடைந்த பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமூக நல அலுவலர் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.