கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு! திருமணமான 1 வருடத்தில் தூக்கில் தொங்கிய இளம் பெண்!

Photo of author

By Sakthi

திருவேற்காடு கனகதுர்கா நகரைச் சார்ந்த ஹரிபாபு என்பவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுக்கும், கடந்த வருடம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், ஜெயந்தி தன்னுடைய அறையிலிருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிய நிலையிலிருப்பதை கண்டு அதிர்ச்சிக்காளாயினர்.

இதனை அடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல்துறையினர் ஜெயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு இது தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டார்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள்.

அதோடு அண்மைக்காலமாக கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணத்தால், அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை எழுந்து வந்திருக்கிறது. இதன்காரணமாக ஜெயந்தி சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்திருக்கிறார்.

இப்படியான நிலையில், கணவர் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகியிருப்பதால் ஆர்.டி.ஒ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.