தயவுசெய்து இதை நிறைவேற்றுங்கள்! தமிழக அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை!

Photo of author

By Sakthi

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம்29ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 14வது உறுதியைப் ஒப்பந்தம் தொடர்பாக அரசு போக்குவரத்து துறை பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இதில் 55ற்கும் அதிகமான தொழிற்சங்கங்களின் சார்பாக பங்கேற்றவர்கள் போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் எல்லோரையும் அரசு ஊழியர்கள் ஆக்கி விடவும், 41 சதவீதம் அகவிலைப்படியை வழங்கி விடவும், ஓய்வு பெற்று இருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஆறு வருடங்களாக நிலுவையில் இருக்கின்ற அகவிலைப்படி வழங்கிடவும் 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நோய் தொற்றாலும், இயற்கையான மரணம் அடைந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் என்றும், பேட்டா இழப்பு உள்ளிட்டவற்றுக்கு ஈடு செய்யவும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அதன் பிறகு அறிவிப்பை வெளியிடுவதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்து கோரிக்கைகளை அனைத்தையும் நிறைவேற்றும் விதத்தில் அறிவிப்பை வெளியிட வேண்டும், அதோடு ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததால் அதற்குண்டான தொகையையும், அறிவித்து தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கூறி இருக்கிறார்.