இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

Photo of author

By Sakthi

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

இன்று நடைபெறும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி ஃபாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

இதையடுத்து முன்னாள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்கள் இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அவர்கள் சதம் அடிக்க வேண்டும். அது தான் கங்குலிக்கு அவர் செய்யும் சிறப்பு சமர்ப்பனமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர் சவுரவ் கங்குலி அவர்கள் விராட் கோலி அவர்களுடன் கை குலுக்காமல் சென்றார். இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. இதையடுத்து ஸ்ரீசாந்த் அவர்கள் இன்று இதனை கூறியுள்ளார்.