Breaking News

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம்!!

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன். பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம்.
அடுத்த ஆண்டு நாடளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த சுற்றுப் பயணம் தொடங்கவுள்ளது.
கடந்த வாரம் அமித்ஷா அவர்களின் தலைமையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் திமுக கட்சியின் சொத்துப் பட்டியலை மையமாக வைத்து அண்ணாமலை அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.