Gold Rate: சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் மக்கள் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள். அதை தொடர்ந்து தங்கம் சில நேரங்களில் உயர்கிறது, பிறகு சரிகிறது என்ற நிலையில் இருந்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
அதன் பிறகும் தங்கம் தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையும் தாண்டியது. அதேபோல் கடந்த 30 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு சற்று விலை குறைந்து ஒரு சவரன் ரூ58,960 விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,370- க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.106.00 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.