அதிரடியாக குறைந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Photo of author

By Sakthi

gold price: தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது.

தங்கம் விலை இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதில் உச்சம் தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் ஆக இருந்தது. அதன் பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை சென்னையில் தங்க நகை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தங்கம்  ரூ.57,200 ரூபாயாக விற்பன செய்யப்பட்டது.நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழமை தங்கம் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று டிசம்பர்-2 தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

அதாவது தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,090-க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.480 குறைந்துள்ளது. எனவே ஒரு சவரன் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.100 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ  வெள்ளி ஒரு லட்சமாக விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக தங்கம் விலை குறைந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை தங்கம்  ஒரு சவரன்  ரூ.560 உயர்ந்து இருந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.