gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,200 க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது. சாமானிய மக்கள் தங்க நகை வாங்குவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் விலையேற தொடங்கிய தங்கம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக உயர்ந்தது.
இருப்பினும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதாவது, டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், டிசம்பர்-20 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் டிசம்பர் 21 விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையானது.
டிசம்பர் 24 தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையானது. டிசம்பர்-25 க்கு பிறகு விலை ஏறத் தொடங்கியது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,000க்கு விற்பனையானது. டிசம்பர்-28 தங்கம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனையானது. நேற்று விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இன்று, டிசம்பர்-30 ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து.
ஒரு கிராம் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.99.90 க்கும். ஒரு கிலோ வெள்ளி ரூ. 99,900க்கு விற்பனையாகிறது.