எல்லைக் கோட்டை தாண்டிய தங்கம் விலை!! மீண்டும் புதிய உச்சத்தில்!!

0
118
Gold price beyond the borderline!! Again at a new peak!!
Gold price beyond the borderline!! Again at a new peak!!

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.60,000 த்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தங்கம் விலை குறையாமல் மீண்டும் உச்சத்தை தொட்டது. இப்படி விலை அதிகரித்து கொண்டே சென்றால் நகை பிரியர்கள் மற்றும் ஏழை மக்களின் நகை வாங்கும் கனவு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் இறக்குமதி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை ரூ.51,000-த்திற்கு கீழ் வந்தது.

இந்த நிலையில் விலை குறையும் என எதிர்பார்த்த மக்கள், மீண்டும் விலை அதிகரித்து கொண்டே சென்றதை பார்த்து வேதனை அடைந்தார்கள். கடந்த 16-ஆம் தேதி ரூ.57,000-த்தை தாண்டியது. பிறகு கடந்த 20-ஆம் தேதி ரூ.58,000-த்தை தாண்டியது. இப்படி விலை குறையாமல் அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் மக்கள் கவலையில் இருந்தார்கள். அதனை தொடர்ந்து நேற்றும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.59,000-த்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று தங்கம் கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்து ஒரு பவுன் ரூ.59,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.  இன்றைய வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிலோவுக்கு ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleபோனஸ் பற்றி ராமதாஸ் பொய் சொல்கிறார்! போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம்!!
Next articleவிராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு  இந்திய மண்ணில் கடைசி போட்டி!! சீனியர் பிளேயர்களை நீக்கவுள்ள பிசிசிஐ!!