தங்கம் விலையில் மாற்றம்! இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!

Photo of author

By Jeevitha

Gold Rate: சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.மேலும் தங்க நகைகள் அதிகம் வாங்குவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது. சென்னையில் 22 கேரட் தங்க விலை (அக்டோபர் 24)சவரனுக்கு ரூ.440 குறைந்தது.இதே போன்று விலை குறைந்தால் ஏழை மக்களும் பயன் பெறுவார்கள்.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 18ம் தேதி  22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கு சவரன் 57,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது. அக்டோபர் 19-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7285-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.2குறைந்து ரூ.110-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் மக்கள் தொடர்ந்து தங்க விலை குறையும் என எதிர்பார்கிறார்கள். தங்கம் விலை குறைந்தால் ஏழை எளிய மக்களும் பயன் பெறுவார்கள். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த தங்க விலை குறைவால் மக்கள் அதிகம் நகைகள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.