Gold News:தங்கத்தின் விலையானது நாள்தோறும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீதும், நிலத்தின் மீதும் போட்ட பணம் எப்போதும் நமக்கு நன்மை தரும் என கூறுவார்கள், இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறங்கங்களுடம் இருந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து, அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எட்டு கிராமுக்கு ரூ.440 குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ரூ.10,000 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 2024-ல் ஒரு சவரன் தங்கம் விலை 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.58,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59,000-த்தை தாண்டி புதிய உச்சம் பெற்று மக்களை வேதனை அடைய வைத்தது. மேலும் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.