மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இறங்குமுகம் கொண்ட வெள்ளி விலை நிலவரம்!!

Photo of author

By Jeevitha

சென்னையில் சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றுவரை சரிந்து வரும் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா சரிந்துள்ளது. சென்னையில்  ஆபரணத்தங்கமானது ஒரு கிராமிற்கு இருபது ரூபாயும் பவுனுக்கு நூற்று அறுபது ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு நாலாயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

மார்ச் மாதத்தில் தங்கத்தின்  விலை மிகவும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூபாய் அறுபாதயிரத்தை எட்டிவிடக்கூடும் என்று மக்கள் கொண்ட அச்சத்தைக் குறைக்க மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு ஜூலை 23 ஆம் நாள் குறைப்பதாக அறிவித்தது. அதன் பிறகு சமீப நாட்களாகவே தங்கத்தின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. இதனால் மக்கள் இறங்குமுகம் கொண்ட தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஐம்பதாயிரத்தைக் கூட தொட்டுவிடும் என நினைத்தனர். அனால் அந்த எதிர்பார்ப்பை முறியடிக்கும் விதமாக சென்னையில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

இருப்பினும் சமீக காலமாக இறங்குமுகம் கொண்டு வந்த தங்க விலை மற்றும் வெள்ளியின் விலையானது  மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.50,800/- ஆகும். அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6350/- என்ற ரீதியில் விற்பனையாகிக்கொண்டு  வருவதாகக் கூறப்படுகிறது.

வெள்ளியானது தற்போது ஒரு கிலோவிற்கு ரூ. 86,500 என கணக்கில் கொண்டு விற்பனையாகிறது.