Gold News: தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் வேகமாக உயர்ந்த தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் விலை குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் நகை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை காலகட்டங்களிலும் மக்கள் மட்டும் தங்க நகை மீதான காதலை மட்டும் குறைத்து கொள்வதில்லை.
விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது நகைகளை வாங்கிக் கொள்வார்கள். அந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. பின்னர் மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை கடந்து மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து மகிழ்ச்சியில் இருந்தார்கள். இந்நிலையை பாழாக்கும் வகையில் மக்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. பிறகு அதே மாதத்தில் ரூ.57,000 -த்தை தொட்டு வரலாறு காணாத உச்சம் அடைந்தது. கடந்த 20-ந் தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாகவும் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.59,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ. 106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.