தங்கம் விலை கடும் வீழ்ச்சி!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

Photo of author

By Sakthi

தங்கம் விலை கடும் வீழ்ச்சி!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

Sakthi

Updated on:

Gold prices fell by Rs 1 per gram

Gold price:தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,080 ஆகவும், ஒரு சவரன் தங்கம்  ரூ.56,640 ஆக விலை குறைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. பின் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஒரு தங்கம் சவரன் ரூ 59,000 ஆக உச்ச பெற்றது. அதன் பின் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது.

தங்கம் வாங்க இது சரியான நேரம் என பொருளாதார வல்லுநர்கள் சொல்லப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 விலை உயர்ந்தது. அதாவது 3000  ரூபாய் வரை விலை உயர்ந்தது. தங்கம் ஒரு சவரன் ரூ.58400க்கு வரை விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாள் நவம்பர்- 25 நேற்று தங்கம் சவரனுக்கு  800 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ 57,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ7,200 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மேலும் தங்கம் விலை இன்று நவம்பர்-26 ரூ.120 குறைந்துள்ளது.

அதாவது தங்கம் ஒரு கிராமுக்கு  குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் ரூ.56,640  ஆக விலை குறைந்துள்ளது.