தங்கம் விலை திடீர் உயர்வு!! இன்றைய விலை நிலவரம் !!

0
90
Gold prices have risen to Rs 320 per bar
Gold prices have risen to Rs 320 per bar

gold price: இன்று, தங்கம் விலை ஒரு சவரனுக்கு  ரூ.320 ஆக உயர்ந்து  இருக்கிறது.

உலகில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் தங்கம் நுகர்வோர் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்தது.

டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,090-க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.480 குறைந்துள்ளது. எனவே ஒரு சவரன் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையாகி வந்தது இந்த நிலையில் இன்று டிசம்பர்-3 ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து இருக்கிறது.

இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.320 ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு சவரன் தங்கம் இன்று ரூ. 57,040-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை தொடர்ந்து நான்காவது நாட்களாக விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற பிற ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Previous articleகே எல் ராகுல் vs ரோஹித் சர்மா யார் தொடக்க வீரர்?? ஆஸ்திரேலியா திரும்பிய கம்பீர் எடுக்க போகும் முடிவு என்ன??
Next articleஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலே குடிபோதையில் எழுதப்பட்டது தான்!! ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்!!