கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை !! அதிர்ச்சியில் மக்கள்!! தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!

Photo of author

By Preethi

கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை !! அதிர்ச்சியில் மக்கள்!! தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!

இன்று தங்கம் விலை ஏற்றத்தில் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயந்து உள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,566 ஆகவும் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.36,528 ஆகவும் உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,981 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,848 ஆகவும் உள்ளது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,660 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,810 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,110 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,440 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,030 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 48,030 ஆகவும் உள்ளது.

இன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளி விலை சற்று சரிந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 72.30 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 723 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 72,300 ஆகவும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையைக் காட்டிலும் 600 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.72,300 ஆகவும் உள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.67,500 ஆகவும், கேரளா, புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 67,500 ஆகவும் விற்கப்படுகிறது.