908 படிகள் கொண்ட பிரமாண்ட கோவில்!

0
107

மிகவும் புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலா இருக்கிறது. இங்கே ஒரே கல்லினால் ஆன 57 அடி உயரம் உள்ள கோமதீஸ்வரர் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கே இருக்கின்ற சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. வித்ய கிரி என்று அழைக்கப்படும் குன்றின்மீது இந்த பிரமாண்டமான கோமதீஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கோவிலில் இருக்கின்ற கோமதீஸ்வரர் சிலைக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். அந்த சமயத்தில் கோமதீஸ்வரர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் என்று பல அபிஷேகங்களும் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் திருவிழாவானது இருபது தினங்கள் நடைபெறும் என்று சொல்கிறார்கள். இந்த திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோமதீஸ்வரர் தளத்தை வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கே இருக்கின்ற கோமதீஸ்வரர் சிலையின் கலைநயம் உலகில் வேறு எங்குமே இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆகவே மிகச்சிறந்த ஆன்மீக தளமான இந்த கோவிலின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. ஹாசனில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் இருக்கிறது. அதேபோல பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் எடியூர் வழியாக காரில் பயணம் செய்தால் இரண்டு மணி நேரம் 40 நிமிடத்தில் இந்த கோவிலை சென்று அடையலாம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleதலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?
Next articleஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்!