போச்சு!! இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாதா.. பொது மக்கள் அதிர்ச்சி!!
இந்திய அளவில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது ,மேலும் அரிசி,பாமாயில்,பருப்பு,சர்க்கரை போன்றவற்றை மிக குறைந்த விலையில் வழங்கி வருகிறது.இதன் மூலம் , அரசால் மக்களின் பொருளாதார நிதி தேவைகளை முடிந்த அளவில் குறைக்க முடிகிறது.மேலும் இரண்டு வகையான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.அவை அரசி மற்றும் சர்க்கரை அட்டைகள்.ஏனெனில் ஒரு சில மக்களுக்கு அரிசி தேவை அதிகமாக உள்ளது,மற்றவர்களுக்கு சர்க்கரை பயன்பாடு அதிகளவில் தேவைப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மானிய விலையில் வழங்கப்படும் (பாமாயில்) எண்ணெய் இந்த இரண்டு விதமான குடும்ப அடைத்தாரர்களும்,விரும்பி வாங்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.இதனை கருத்தில் கொண்டு அரசுகள் பாமாயிலை,பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அதிமாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்து வருகிறது.இந்தநிலையில் தான்,ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.ஏனெனில் நமது இந்தியவிலுள்ள ,கிராமங்களில் தென்னை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர்.அதனால் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆளும் கட்சியான திமுக,தாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதும் மாற்றியமைத்து ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் அது குறித்து இப்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமாகா தலைவர் ஜிகே வாசன் குற்றம் சாட்டியதோடு மட்டிமில்லாமல், இனிமேலாவது அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.