அஜித் படங்களில் முதல் நாள் அதிக வசூல்!.. குட் பேட் அக்லி செய்த மெகா சம்பவம்!..

0
18
good bad ugly

விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.

எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த படம் இந்தியாவில் 28.5 கோடியும் உலக அளவில் 46லிருந்து 50 கோடி வரை வசூல் செய்ததாக சொன்னார்கள்.

good bad ugly

ஆனால், தமிழகத்திலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரனே டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleபழனிச்சாமி போட்ட கண்டிஷன்!.. அடங்கிப்போன அமித்ஷா!.. நடந்தது இதுதான்!..
Next articleஅதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!…